பிரதான செய்திகள்

பூநகரி தெற்கு சமுர்த்தி வங்கி முகாமையாளரின் மனிதாபிமானமற்ற செயற்பாடு! பயனாளிகள் விசனம்

கிளிநொச்சி – பூநகரி தெற்கு பிரதேசத்தில் உள்ள சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவரின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளால் பயனாளிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சமூர்த்தி வங்கி முகாமையாளர் தனது விருப்பபடி மக்களின் நலன்களுக்கு அப்பால் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும், பல சந்தர்ப்பங்களில் நடைமுறைகளுக்கு மாறாக சமூர்த்தி செயற்பாடுகளில் ஈடுப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் இது குறித்து மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும், எவ்வித பயனும் இல்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

அன்மையில் குறித்த முகாமையாளர் கடமையாற்றும் சமூர்த்தி வங்கிக்கு பல கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து சமூர்த்தி பயனாளிகள் கை குழந்தைகளுடனும் சென்றுள்ளனர்.
சில மணி நேரம் காத்திருக்க வைத்திருந்து விட்டு பணம் இல்லை எனத் தெரிவித்து வங்கி வளாகத்திலிருந்து வெளியே செல்லுங்கள் என்று பயனாளிகளை அதிகார தொனியில் வெளியேற்றியுள்ளார்.

இதன் பின்னர் வெளியேறி பயனாளிகள் நீண்ட நேரமாக வீதியில் கை குழந்தைகளுடன் காத்திருந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சில சமூர்த்தி பயனாளிகள் வருவதற்கு மாத்திரமே பேருந்துக்கு பணம் கொண்டு வந்தவர்கள் திரும்பிச் செல்வதற்கு பணம் இன்றி பலரிடம் கடனாக பணம் கேட்டு நின்ற நிலைமையும் நடந்துள்ளது.

தொடர்ச்சியாக குறித்த வங்கி முகாமையாளர் தான் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு கை குழந்தைகளுடன் வரும் பெண்களின் நிலைமையை புரிந்துகொள்ளாது மனிதாபிமானமற்று நடந்துகொள்வது பிரதேச மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

குறித்த சமூர்த்தி வங்கி முகாமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பிலிருந்தும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்ட மட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

பிரதேச சமூர்த்தி பயனாளிகள் சமூர்த்தி நடவடிக்கைகள் சீரான முறையில் இடம் பெறவேண்டுமானால் குறித்த வங்கி முகாமையாளரை இடமாற்றம் செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related posts

அமெரிக்க நகரில் செல்பீ சிலை

wpengine

2019ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம்

wpengine

வடக்கு, கிழக்கில் 20,000 உளவாளிகள் நடமாடுகின்றார்கள் சேனாதிராஜா

wpengine