பிரதான செய்திகள்

புளொட்டின் உபதலைவர்களில் ஒருவரான மகாதேவன் சிவநேசன் (பக்தன்) காலமானார்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஆரம்பகால உறுப்பினரும், கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான காரைதீவைச் சேர்ந்த, பக்தன் என்கிற மகாதேவன் சிவநேசன் கடும் சுகயீனம் காரணமாக இன்று(09.05.2021) காலமாகியுள்ளார்.

80களில் அம்பாறை மாவட்டத்தில் காந்தீயம் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளராக இருந்த இவர், பின்னர் புளொட் அமைப்பில் உள்வாங்கப்பட்டு புளொட்டின் அம்பாறை மட்டக்களப்பு பிராந்திய பொறுப்பாளராகவும் இருந்தவர். அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மாத்திரமல்ல தமது அமைப்புக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஒரு பேரழிப்பென புளொட் அமைப்பு தனது அஞ்சலி அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

Related posts

விராட் கோலிக்கு 12 இலட்சம் ரூபா அபராதம்

wpengine

லிந்துலை தீ பரவலில் 10 வீடுகள் தீக்கிரை – 40 பேர் பாதிப்பு!

Editor

பால்மாவில் பன்றி எண்ணெய் கலப்படம் செய்யப்படவில்லை

wpengine