பிரதான செய்திகள்

புலிகள் இயக்கம் ஒரு சித்தாந்தத்தில் இருந்தார்கள் அந்த இயக்கமே அழிவு நிலைக்கு தள்ளப்பட்டது.

நாட்டில் இடம்பெற்ற குண்டுதாக்குதல்களின் பின்புலத்திலே ஒரு வெளிச்சக்தியின் செயல்பாடு தான் பிரதானமாக இருக்கின்றது என்பதை எல்லோரும் அடையாளங்காண வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த படுமோசமான படுகொலை சம்பவங்களின் பின்னால் முழு நாடும் துயரத்தில் மாத்திரம் அல்ல அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் தங்களது பாதுகாப்பு சம்பந்தமான அச்சத்திலும் இன்றைய சூழல் இருக்கின்றது.

இதன் அடிப்படையில் இருக்கின்ற அவசியமான அம்சம் முழு நாடுமே ஒற்றுமைப்பட்டு இந்த படு பாதக செயலுக்கு காரணமான இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஒரு சிறு கும்பலை இந்த நாட்டிலே பரவ விடாமல் தடுக்கிற ஒரு ஒற்றுமைத் தன்மையுடனான செயற்பாட்டை முன்னெடுப்பதை தவிர எங்களுக்கு வேறு மார்க்கம் முதலில் இல்லை என்பதை எல்லோரும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நாட்டில் இடம்பெற்ற குண்டுதாக்குதல்களின் பின்புலத்திலே ஒரு வெளிச்சக்தியின் செயல்பாடு தான் பிரதானமாக இருக்கின்றது என்பதை எல்லோரும் அடையாளங்காண வேண்டும்.

புலிகள் இயக்கம் தங்களுக்கென்ற ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே இந்த நாட்டிலே தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அதன் பிற்பாடு அந்த இயக்கமே அழிவு நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆனால் இந்த கும்பல் உள் நாட்டில் அல்ல. சர்வதேச ரீதியான இஸ்லாமிய அரசை நிறுவ போகிறோம் என்கிற ஒரு கற்பனையிலே தங்களுடைய நாட்டிலே குடும்பத்தோடு மாண்டு உள்ளார்கள் என்பது மிகவும் வியப்பிற்குரிய விடயம் மாத்திரம் அல்ல. இது எவ்வளவு மிக மடமைத்தனமான செயற்பாடு என்பதை நாங்கள் எல்லோரும் தெரிந்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு ஓர் அசிங்கம்!

wpengine

முல்லைத்தீவில் வீடுகள் தரமானதாக இல்லை மக்கள் வெளியேற்றம்.

wpengine

மன்னார்,எருக்கலம்பிட்டி பாதைக்கு 18கோடி ரூபா ஒதுக்கீடு! தவிசாளர் நன்றி தெரிவிப்பு

wpengine