பிரதான செய்திகள்

புலிகளை விடவும் கூடுதலான அழிவினை ஜே.வி.பி ஏற்படுத்தி வருகின்றது- ஞானசார தேரர்

ஜே.வி.பி. கட்சி பௌத்த மதத்திற்கு அழிவை ஏற்படுத்தி வருவதாக கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கிருலப்பனையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

பௌத்த மதத்திற்கு ஜே.வி.பி கட்சியும் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் செய்து வரும் அழிவுகள் பற்றி விரைவில் மாநாயக்கர்களிடம் முறைப்பாடு செய்யப்படும்.

பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் கூடுதலான அழிவினை ஜே.வி.பி மேற்கொண்டு வருகின்றது.

சர்வமத அமைப்பு என்ற பெயரில் நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்கின்றனர்.

பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றுக்கொள்ளும் பௌத்த பிக்குகளை ஜே.வி.பி தனது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றது.

இந்த நிலைமை தற்போது தீவிரமடைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா..!

Maash

அதிக விலைக்கு மறைத்து விக்கப்பட இருந்த 4750 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது .

Maash

தேசியப்பட்டியல் மக்களுக்குரியது,தீர்மானிப்பது மக்களே!

wpengine