அரசியல்செய்திகள்பிராந்திய செய்தி

புத்தளம் முன்னாள் நகரபிதா மர்ஹூம் பாயிஸின் மகள் ஷதா பாயிஸின் உருக்கமான பதிவு.

நேற்று (17) புத்தளம் மாநகர சபையின் புதிய மேயராக சகோதரர் ரின்சாத் அவர்களும், பிரதி மேயராக சகோதரர் நுஸ்கி நிசார் அவர்களும் உத்தியோகபூர்வமாக பதவியேற்கும் நிகழ்வில் அழைக்கப்பட்ட மாநகர சபை உறுப்பினர் என்ற வகையில் நானும் கலந்துகொண்டு இருவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
அங்கு அந்த மேயர் அறைக்குள் நீண்ட காலத்திற்குப் பின் உள் நுழைந்த போது கவலை கலந்த நினைவுகளை உள்ளத்தில் மீட்டிப் பார்த்தேன்.

எனது தந்தை மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் அவர்கள் சிங்கம் போல அந்தக் கதிரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் கண் முன் தோன்றி கண்ணீரையும் வரவழைத்தது.

இந்த நகரை அழகுபடுத்தி, கட்டிக் காத்த எனது தந்தையின் கனவுகளை முழுமைப்படுத்த முடியாமலேயே அவர் காலம் சென்றதை நினைத்தும், அவர் உயிரோடு இன்று இருந்திருந்தால் மீண்டும் அந்த அரியாசனத்தை ஒரு வேளை தன் வசப்படுத்தியிருப்பார் என்றும் நினைத்து வருந்தியவளாய் அந்த இடத்தில் அமர்ந்திருந்தேன்.

பின் புதிய மேயர், புதிய பிரதி மேயர், நான் உட்பட ஏனைய புதிய உறுப்பினர்கள் என அனைவரும் எனது தந்தை கம்பீரமாய் உருவாக்கிய இந்த நகரை மேலோங்கச் செய்ய திறம்பட உழைப்போம் என்ற நம்பிக்கையை உள்ளத்தில் பூண்டவளாக சபையில் இருந்து வெளியேறினேன்.

அத்தோடு ஒரு மாநகர சபையின் உறுப்பினராய், ஒரு தலைவனின் புதல்வியாய், மக்கள் சேவகியாய் என்னாலான அத்தனை நல்ல விடயங்களையும் விடாமுயற்சி கொண்டு இன் ஷா அல்லாஹ் செய்து முடிப்பேன் என்கிற உறுதியை பூண்டிருக்கும் எனக்கு உங்கள் பூரண ஆதரவையும், பிரார்த்தனைகளில் அங்கத்தையும் நல்குமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி !
ஷதா பாயிஸ்
உறுப்பினர்,
மாநகர சபை – புத்தளம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Related posts

நீதி உறுதி செய்யப்படாவிட்டால் வீதிகளில் இறங்கி போராடுவது அவசியமாகிவிடு – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

Maash

வன்னி தொகுதியில் சஜித் அணியில் றிஷாட், ஹக்கீம் இணைந்து போட்டி

wpengine

மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி கட்சி இன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

Maash