பிரதான செய்திகள்

புத்தளம் மாவட்டத்தில் கல்வி அபிவிருத்திக்காக 8 பாடசாலைகளுக்கு 12 கோடி ரூபா ஒதுக்கீடு

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ்   புத்தளம்    பிரதேச கல்வி  அபிவிருத்திக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். எம். நவவி அவர்களின் முயற்சி காரணமாக இந்த அரும் பெரும் சேவை முன்னெடுக்கப்படுகின்றது.

அது மட்டுமன்றி புத்தளம் ஸாஹிராக் கல்லூரியின் வகுப்பறை அபிவிருத்திக்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச். எம். நவவி அவர்கள்  தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 7 இலட்சம் ரூபாவை  இப் பாடசாலைக்கு வழங்கியுள்ளார்.

முஸ்லீம் மக்களின் தேவை அறிந்து  அவர்களது அறிவையும் கல்வித் திறனையும் அதிகரிக்க வேண்டும்  என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்கள் மூலம் செயல்பட்டு வருகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் அவர், இந்நிகழ்வுகள் யாவும் இம்மாதம் 20 ஆம் திகதி நடைபெற்றதாகக் கூறினார்.

Related posts

ஒரு சந்தையினை இரு தடவை திறந்த ஹாபீஸ் ,தயா

wpengine

கணேமுல்ல சஞ்சீவ கொலை, செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.12 இலட்சம் சன்மானம்.

Maash

அரசாங்கத்தை கவிழ்க்க ஜாதிக ஹெல உறுமய சதி

wpengine