அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

புத்தளம் – தில்லடி பிரதேசத்தில் தேர்தல் துண்டுப்பிரசுரங்களுடன் பெண் வேட்பாளர் கைது.

தேர்தல் துண்டுப்பிரசுரங்களுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறி ஆதரவாளர்களின் உதவியுடன் தேர்தல் துண்டுப்பிரசுரங்களை வீடு வீடாக பகிர்வதாக புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான பெண் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் – தில்லடி பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 86 தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பிரதமர் மோடியின் கல்வி தகுதி என்ன? கெஜ்ரிவால் அதிரடி கேள்வி

wpengine

பலத்த பாதுகாப்புடன் ஞானசார தேரர் விஜயம்

wpengine

அமெரிக்கா ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

wpengine