பிரதான செய்திகள்

புத்தளத்தில் ஹக்கீமின் வடிவேல் கதையின் வடிவு

இருவர் ஒரு குறித்த விடயம் பற்றி மிக நீண்ட நேரமாக விவாதம் செய்து கொண்டிருக்கின்றனர்.இருவரும் சிறந்த முறையில் விவாதம் செய்யும் பண்புடையவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.இதன் போது ஒருவர் கோபப்படுகிறார்.அவர் குறித்த தலைப்பை விட்டு மற்றயவரின் தனிப்பட்ட விடயத்தினுள் மூக்கை நுழைக்கின்றார்.மற்றவர் தன் தலைப்பை விட்டகலாது நிதானமாக விவாதம் செய்து கொண்டிருக்கின்றார்.இதன் போது குறித்த கோபப்பட்ட நபர் முன் வைத்த குற்றச் சாட்டு உண்மை பொய் என்பதற்கு அப்பால் கோபப்பட்ட நபர் விவாதத்தின் போது வெற்றிபெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டமை தான் இங்கு அறிந்து கொள்ளக் கூடிய மிகப் பெரும் உண்மை.

இது போன்று தான் அமைச்சர் ஹக்கீமும் அமைச்சர் றிஷாதும் அரசியல் யுத்தம் நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.இருவரும் அரசியலில் பல மோதல்களை சந்தித்துள்ளனர்.தற்போது அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் றிஷாதின் நிரூபிக்கப்படாத தனிப்பட்ட விடயங்களை கதைத்து அமைச்சர் றிஷாதை வீழ்த்தி தன் இருப்பை தக்க வைக்க முயல்வதை புத்தளத்தில் இடம்பெற்ற புத்தெழுச்சி விழாவில் அவதானிக்க முடிந்தது.இது கூறும் மிகப் பெரும் உண்மைகளில் ஒன்றுதான் அரசியலில் அமைச்சர் றிஷாதை அமைச்சர் ஹக்கீமை விஞ்சி செல்லும் நிலையில் உள்ளார் என்பதாகும்.

அமைச்சர் றிஷாத் வெளியேற்றப்பட்ட வடபுல மக்களின் இரத்தக் கண்ணீர்களை துடைக்குமுகமாக பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்வதை அவதானிக்க முடிகிறது.இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் வீதி போட்டு பணம் சம்பாதிக்கின்றார்,குளம் நிர்மாணித்து பணம் சம்பாதிக்கின்றார் என்றவாறான மேடைப்பேச்சை நிறுத்தி அதனை ஆதாரங்களுடன் தான் நிரூபிக்க வேண்டும்.இது தான் அமைச்சர் ஹக்கீமிற்கு அழகும் கூட.அவர் ஊழல் செய்திருந்தால் ஏன் இன்று வரை கைது செய்யப்படவில்லை?

மயில் தமிழர்களின் கடவுள்களில் ஒருவரான முருகனின் வாகனம்.முருகனுக்கு வடிவேல் என்ற பெயருள்ளது.இதிலிருந்து தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் வடிவேலின் நாமத்தை கொண்டு வந்து அவரின் நகைச்சுவை ஒன்றை கூறி அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் றிஷாத் ஊழல் செய்ததாக நகைச்சுவை கலந்த பாணியில் கூறியிருந்தார்.நகைச்சுவை காட்டி சிரித்து மகிழ அமைச்சர் ஹக்கீமிற்கு ஒரு கடவுளின் நாமம் தான் கிடைத்ததா? இது ஒரு மதத்தை அவமானப்படுத்தும் செயலாகும்.ஏனைய மதக் கடவுளை அவமானப்படுத்துவத்தை இஸ்லாம் ஒரு போதும் அனுமதியளிக்கவில்லை.நீங்கள் ஏனைய மதத்தவர்களின் கடவுளைப் பற்றி தவறாக கதைக்க வேண்டாம் என்ற கருத்துப்படவே இஸ்லாம் முஸ்லிம்களுக்கு  வழி காட்டுகிறது.இவர் முஸ்லிம் சமூகத்தத்தை வழி காட்டும் தலைவர் மாத்திரமல்ல குர்ஆனையும் ஹதீதையும் யாப்பாக கொண்ட மு.காவின் தலைவரல்லவா? இதனை அமைச்சர் றிஷாத் கதைத்திருந்தால் தமிழ் அரசியல் வாதிகள் அவரை பிச்சி உதறியிருப்பார்கள்.

எதற்கெடுத்தாலும் மு.காவின் யாப்பு குர்ஆனும் ஹதீதும் என்று கூறுவதே முஸ்லிம் காங்கிரசினருக்கு வழக்கமாகிவிட்டது.அதன் தலைவர் விபச்சார தமிழ் சினிமா நகைச்சுவையை சிறு கூச்சமுமின்றி பகிரங்க மேடையில் கூறி தனது ஆதரவாளர்களுடன் சிரித்து மகிழ்கிறார்.அதுவும் ஒரு மனிதன் மீது நிரூபிக்கப்படாத அபாண்டத்தை சுமத்தி.இவர் குர்ஆனையும் ஹதீதையும் யாப்பாக கொண்ட ஒரு கட்சியின் தலைவராகயிருக்க தகுதியானவரா? இது தான் இவர் இளைஞர்களுக்கு காட்டும் முன் மாதிரியா?

முஸ்லிம் சமூகமே உன் தலைவிதியை தீர்மானித்துக் கொள்

ஏ.சி.எம் சஹீல்

சம்மாந்துறை தொகுதி இளைஞர் அமைப்பாளர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

Related posts

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் விரிவுரையாளர்!! JAFFNA NEWS TAMIL

Editor

முஸ்லிம் சிந்தனைப் பெருவெளி ஒருமுகப்படுவது எப்போது?

wpengine

கொரோனா பரவல் – மூடப்படும் தாஜ்மஹால்!

wpengine