பிரதான செய்திகள்

புத்தளத்தில் குப்பைகளை கொட்டும் திட்டத்தை எதிர்த்து இறுதிவரை போராடுவோம்!

கொழும்­பி­லி­ருந்து புத்­த­ளத்­திற்கு எடுத்து வரப்­ப­ட­வுள்ள குப்பை கூளங்கள் தொடர்பில் புத்­தளம் மக்கள் மேற் கொள்­ள­வுள்ள நட­வ­டிக்கை தொடர்­பாக புத்­தளம் பெரிய பள்­ளி­யினால் செய்­தி­யாளர் சந்­திப்­பு­ ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அங்கு தெரி­விக்­கப்­பட்ட கருத்­துக்­களின் தொகுப்பு வரு­மாறு: 

பீ.எம்.ஏ. ஜனாப் தலைவர் , பெரிய பள்ளி புத்­தளம்
கொழும்­பி­லுள்ள குப்பை கூளங்­களை புத்­தளம் எழு­வன்­குளம் பகு­தி­யி­லுள்ள அரு­வக்­காடு பகு­திக்கு எடுத்து வரு­வ­தற்­கான திட்டம் மிக நீண்ட கால­மாக  இடம் பெற்று வரு­வ­தாக அறி­கின்றோம்.

இவ்­வாறு எடுத்து வரப்­ப­ட­வுள்ள குப்பை கூளங்­களை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை புத்­தளம் பெரிய பள்­ளி­யினால்  செய்து வரு­கின்றோம். இது தொடர்­பான கருத்­துக்­க­ளையும் தெளி­வு­க­ளையும் சர்­வ­மத தலை­வர்கள், அர­சி­யல்­வா­திகள்,  பொது மக்கள் மற்றும் துறை சார்ந்­த­வர்­க­ளிடம் கலந்­து­ரை­யா­டிய போது புத்­த­ளத்­திற்கு எடுத்து வரப்­ப­ட­வுள்ள குப்பை கூளங்கள் தொடர்­பாக  எந்த ஒரு தரப்­பாரும் தமது விருப்­பத்தை தெரி­விக்­காது தமது அதி­ருப்­தி­யையே வெளிப்­ப­டுத்­தினர்.

இந்த விடயம் தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம். நவவி பாரா­ளு­மன்­றத்தில் உரை ஒன்­றி­னையும் ஆற்­றினார். சுமார் ஒரு மாதத்­திற்கு முன்பு குப்பை தட்­டப்­பட உள்ள இடத்­தினை பார்ப்­ப­தற்குச் சென்ற  அமைச்­சர்­க­ளான ஜெய­விக்­கி­ரம பெரேரா, நாவின்ன, வடமேல் மாகாண முத­ல­மைச்சர் உட்­பட அர­சி­யல்­வா­திகள்  அனை­வ­ருமே  குப்பை கொட்­டு­வ­தற்கு இந்த இடம் பொருத்­த­மற்­றது என்­றுதான் குறிப்­பிட்­டுள்­ளனர்.

அதே­வேளை சுற்­றாடல் தொடர்­பான அறிக்­கையில் தீர்க்­க­மான முடிவு ஒன்றும் கூறப்­ப­ட­வில்லை. எனினும் எந்த வகை­யி­லா­வது புத்­த­ளத்­திற்கு குப்­பை­களை கொண்டு வரும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக அறி­கின்றோம்.

1960 ஆம் ஆண்டு முதல் புத்­த­ளத்தில் சீமெந்து தொழிற்­சாலை அமைக்­கப்­பட்­டதன் பின்பு அங்­கி­ருந்து வெளி­யாகும் தூசுகள் மூலம் புத்­தளம் மக்கள் பாதிக்­கப்­பட்டே வந்­தனர்.

அதே போன்று நுரைச்­சோலை அனல் மின்­சார நிலையம் அமைக்­கப்­பட்ட போது பல்­வகை எதிர்ப்­புகள் முன்னெடுக்­கப்ப­ட்ட போதும் அன்­றி­ருந்த அரசு அவ­ச­ர­கால சட்டம் மற்றும் சர்­வா­தி­கார ஆட்சி இருந்­ததால் எந்த வித­மான பொது மக்­களின் எதிர்ப்­பையும் கவ­னத்தில் எடுக்­காத அன்­றைய அரசு அனல் மின் நிலை­யத்­தினை நிர்­மா­ணித்து முடித்­தார்கள்.

அதன் பாதிப்­புக்­களை புத்­தளம் மற்றும் கல்­பிட்டி மக்கள் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் .

அதே­வேளை குப்பை கூளங்­க­ளையும் இங்கு வந்து தட்­டு­வ­தனால் புத்­தளம் மக்கள் தொடர்ந்து பாதிப்­புக்­களை எதிர் கொள்ளும் நிலை ஏற்­படும். புத்­தளம் கட­லினை நம்பி வாழும் சுமார்  5000 மீனவக் குடும்பங்கள் உப்பு உற்­பத்­தியை நம்பி வாழும் சுமார் 4000 குடும்பங்கள் என்று  9000  குடும்­பங்கள் பிர­தா­ன­மாக பாதிக்­கப்­ப­டுவர். ஆனால் அவர்கள் எந்த பாதிப்பும் வராது  என்று கூறு­கின்­றனர்.

நுரைச்­சோலை  அனல் மின் நிலையம் நிர்­மா­ணிக்­கப்­படும்  போது இந்த பகுதி மக்­க­ளுக்கு மிகக் குறைந்த கட்­ட­ணத்தில் மின்­சாரம் தருவோம் என்று கூறினர். 35  சதத்­திற்கு ஒரு அலகு மின்­சாரம் தரு­வ­தாகக் கூறி எம்மை ஏமாற்­றினார்.

குடி­நீ­ரையும்  இல­வ­ச­மாக தர முடியும் என்றும் கூறி­னார்கள். ஆனால் எது­வுமே எமக்கு கிடைக்­க­வில்லை.

எனவே இந்த குப்­பை­களை கொண்டு வரும் விட­யத்தை நாம் ஆரம்­பத்­தி­லேயே கட்­டுப்­ப­டுத்­தா­விட்டால் புத்­தளம் மக்கள்  பாரிய பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.

தற்­போது நல்­லாட்சி அரசு இருப்­பதால் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பொது மக்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டல்­களை நடாத்தி எமக்கு நல்­ல­தொரு தீர்வைப் பெற்றுத் தருவர் என்று நாம் எதிர்­பார்க்­கின்றோம். அதை­வி­டுத்து குளி­ரூட்­டிய அறை­களில் அமர்ந்து கொண்டு உத்­த­ர­வு­களைப் பிறப்­பிப்­பதை தவிர்த்துக் கொள்­ளு­மாறு கேட்டுக் கொள்­கின்றோம்.

புத்­த­ளத்­திற்கு 700 மெற்றிக் தொன் கூளங்­களை எடுத்து வர­வுள்­ள­தாக ஊட­கங்கள் மூலம் அறிந்து கொண்டோம். 20 அடி நீள­மான கொள் கலன்கள் மூலம் 13 கொள் கலன்­களில் இரு முறை ஒரு நாளைக்கு  26 கொள் கலன்கள் மூலம் இந்த கூளங்கள் எடுத்து வரப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இப்­பொ­ழுது வேறொரு கதை­யை கூறு­கின்­றார்கள். கொலன்­னாவையி­லுள்ள கூளங்­களை எடுக்­காது, நாளாந்தம் கொழும்பு, கண்டி, அனு­ரா­த­புரம் பகு­தி­களில்  சேக­ரிக்­கப்­படும்  கூளங்­களை இங்கு எடுத்து வர­வுள்­ளார்­களாம்.

இந்த குப்பை கூளங்­களால் ஆற்று நீர் பின்பு கடல் நீர் மாச­டைந்து முழு கடலும் பாதிக்­கப்­படும். மீன், இறால், உப்பு உற்­பத்­திகள் யாவும் பாதிக்­கப்­படும்.

எமது கோரிக்­கை­களை அரசு ஏற்­கா­விட்டால் எமக்கு யுத்தம் செய்து பழக்­க­மில்லை, அமைதி வழி மூலம் எமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­துவோம். ஜனா­தி­பதி தேர்தல், பாரா­ளு­மன்ற தேர்தல் ஆகி­ய­வற்றில் ஐ.தே.கட்சி புத்­தளம் மாவட்­டத்தில் வெற்றி பெற புத்­தளம் தொகுதி மக்­களே பிர­தான காரணம். எனவே தற்­போ­துள்ள அரசு புத்­தளம் மக்­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்­றியே ஆக வேண்டும்.

மெள­லவி அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்
தலைவர்,  ஜம்­இய்­யத்துல் உலமா
புத்­தளம் மாவட்டம்.

கடந்த அர­சினால் திட்­டங்கள் தீட்­டப்­பட்டு தற்­போ­தைய அர­சினால் இந்த விடயம் தொட­ரப்­ப­டு­கின்­றது.  பத்­தி­ரிகை செய்­தி­களின் படி இன்னும் மூன்று மாதங்­களில் புத்­த­ளத்­திற்கு அந்த கூளங்கள் எடுத்து வரப்­ப­ட­வுள்­ளன.

மதத் தலைவர் என்ற அடிப்­ப­டையில் பொது மக்கள் பாதிக்­கப்­படும் எந்த விட­யத்­தையும் அனு­ம­திக்க முடி­யாது. சூழ­லி­ய­லா­ளர்கள், புத்தி ஜீவி­களின் அறிக்­கையின் படியும் இந்த பிர­தேச மக்­க­ளுக்கு மாத்­திரம் அன்றி தூரப் பிர­தேச மக்­க­ளுக்கும் இந்த குப்­பைகள்  பாதிப்பை ஏற்­ப­டுத்த இருக்­கின்­றது.

இந்த விப­ரீ­தத்­தி­லி­ருந்து பொது மக்­களை பாது­காப்­பது என்­பது மதத் தலைவர் என்ற ரீதியில் கட்­டாய கடை­மை­யாக இருக்­கின்­றது. அதே போன்று அர­சி­யல்­வா­திகள், புத்­தி­ஜீ­விகள் மீதும் தார்­மீக பொறுப்­பாக உள்­ளது.

எமது ஜனா­தி­பதி இயற்கை சூழலை நேசிக்­கின்ற ஒருவர். அதற்கு ஆபத்து வரு­கின்ற போதெல்லாம் அவர் அமைச்­ச­ராக இருந்த போதெல்லாம் அதனை கண்­டித்­துள்ளார். எமது மக்­களின் குறைகளை ஜனா­தி­ப­திக்கு எடுத்து வைக்கும் போது ஜனா­தி­பதி இதற்கு இட­ம­ளிக்­க­மாட்டார் என்­பது எமது திட­மான நம்­பிக்­கை­யாக உள்­ளது.

நவீன தொழில் நுட்ப முறை­களைப் பயன்­ப­டுத்தி பொது மக்­க­ளுக்கு பாதிப்பு வராத முறையில் இந்த நட­வ­டிக்கை மேற் கொள்­ளப்­படும் என்று கூறப்­ப­டு­கின்­றது. எனினும் எமது நாட்டு கொந்­த­ராத்­துக்­கா­ரர்கள் தமது சுய இலா­பங்­க­ளுக்­காக செய­ல்­படும் நிலை கடந்த காலங்­களில் வளர்ச்சி அடைந்­தி­ருந்­தது.

அதன் அடிப்­ப­டையில் இதற்கு எந்த அளவில் தொழில் நுட்­பங்­களைப் பாவித்து பொது மக்­க­ளுக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் செயல்­ப­டுத்­தப்­படும் என்­பதில் சந்­தேகம் உள்­ளது.

எனவே ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோ­ரிடம் புத்­தளம் மக்கள் வேண்டிக் கொள்­வது  இந்த திட்­டத்தை உட­ன­டி­யாக முற்று முழு­தாக நிறுத்­து­மாறும் வெளி மாவட்­டங்­க­ளிலே சேக­ரிக்­கப்­படும் குப்­பை­களை அந்­தந்த மாவட்­டங்­க­ளி­லேயே மக்­க­ளுக்கு பய­னுள்ள அமைப்பில் அவற்றை பயன்­ப­டுத்த ஏற்­பா­டு­களை செய்­யு­மாறும் கேட்டுக் கொள்­கின்றோம்.

முன்­னைய கால அர­சியல் சூழ்­நிலை கார­ண­மாக நுரைச்­சோலை அனல் மின் நிலையம் போன்ற விட­யங்கள் தொடர்பில் பொது மக்­களின் குரல்கள் எடு­ப­டாது இருந்­தி­ருக்­கலாம். ஆனால் அந்த அர­சியல் சூழ் நிலையை முற்று முழு­தாக மாற்­று­வ­தற்கு புத்­தளம் தொகுதி மக்கள் காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை செய்­துள்­ளனர். முன்­னைய கால சூழ் நிலைகள் எல்லாம் மாற்­றப்­பட்டு  தற்­போ­தைய சூழ் நிலையில் மக்­களின் குர­லுக்கு மதிப்­ப­ளிக்­கப்­படும் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது.

அரசோ, வேறு யாரோ இந்த விட­யத்­தினை செய்­யா­தி­ருந்தால் மதத் தலை­வர்கள் என்ற ரீதியில் நாங்கள் ஒன்றைக் கூற முடியும். எல்லாம் வல்ல இறை­வ­னி­டத்தில் பொறுப்பு கொடுத்து அவ­னிடம் இதற்­கான முடிவை பெற்றுத் தரு­மாறு வேண்­டு­வதைத் தவிர வேறு வழி இல்லை என்­ப­தையும் ஞாப­கப்­ப­டுத்­து­கின்றோம்.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்
டாக்டர் ஐ.எம். இல்யாஸ் 

புத்­த­ளத்­திற்கு எடுத்து வரப்­ப­ட­வுள்ள குப்பை கூளங்கள் தொடர்பில் எமது இளை­ஞர்கள் மிகவும் துடிப்­பாக உள்­ளனர். புத்­த­ளத்­திற்கு சீமெந்து கூட்­டுத்­தா­பனம், ஒயிஸ் ஒப் அமெ­ரிக்கா, அனல் மின் நிலையம் வரும் போதெல்லாம் நாம் பல போராட்­டங்­களை செய்தோம். ஆனால் எந்த பிர­யோ­ச­னமும் கிடைக்­க­வில்லை.

எல்லா குப்­பை­க­ளையும் ஒன்று சேர்க்கும் இட­மாக இன்று புத்­தளம் மாறி­விட்­டது.

மூன்று மாதத்­திற்குள் குப்­பை­களை எடுத்து வர­வுள்­ள­தாக கூறு­கின்­றனர். இந்த மூன்று மாத இடை வெளிக்குள் வழக்கு தாக்கல் செய்வோம்.சாத்­வீக ரீதியில் அமை­தி­யான ரீதியில் அகிம்சை வழியில் ஆர்ப்­பாட்­டங்­களை செய்வோம். இதற்­கெல்லாம் முடி­யாத நிலை ஏற்­பட்டால் பல­வந்­த­மான சில முறை­க­ளையும் எடுக்க வேண்டி வரும். அதற்­காக இளை­ஞர்கள் தயா­ரா­குவர்.

எனவே இந்த அரசு அவ்­வா­றான நிகழ்­வு­க­ளுக்கு எம்மை கொண்டு செல்­லாது என்று நம்­பு­கின்றோம். இந்த நாட்டில் நல்­லாட்­சியை கொண்டு வரு­வ­தற்கு புத்­தளம் மக்கள் முக்­கிய பங்­க­ளிப்பு செய்­த­வர்கள். குப்பை என்­பது ஒரு பெரிய பொக்­கிஷம். உலகில் குப்பை இல்­லாத நிலையில் அதனை வாங்­கு­வ­தற்கு எல்­லோரும் தயா­ராக உள்­ளனர்.

அவ்­வா­றான நிலையில் ஏன் இந்த குப்­பை­களை புத்­த­ளத்­திற்கு கொண்டு வந்து திணிக்­கி­றார்கள் என்­றுதான் தெரி­ய­வில்லை.

எனவே நாம் இதனை அமை­தி­யான முறையில் எதிர்ப்போம் அல்­லாது போனால் இளைஞர்­களை திரட்டி பாரிய ஆர்ப்­பாட்­டங்­களை செய்­வ­தற்கு தயா­ராக உள்ளோம்.

ஏ.ஆர்.எம். அலி சப்ரி,
உறுப்­பினர், பெரிய பள்ளி நிர்­வாக சபை.

புத்­த­ளத்­திற்கு எடுத்து வரப்­ப­ட­வுள்ள குப்பை கூளங்கள் தொடர்பில் பெரிய பள்ளி, உலமா சபை, அரசியல்வாதிகள், பொது மக்கள் அனைவரும் இணைந்து இதனை கொண்டு வருவதை தடை செய்வதற்கு பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றோம்.

1960 முதல் புத்தளம் சூழலை மாசுபடுத்தும் பல வழிகள் இடம் பெற்ற போது அதற்கு எதிராக புத்தளம் மக்கள் பல போராட்டங்களை செய்தும் தொடர்ந்தும் புத்தளம் மக்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டே வருகின்றது.

புத்தளத்தில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதால்தான் இந்த அநியாயங்கள் நடக்கின்றதோ என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த குப்பை கூளங்களை எடுத்து வரும் முயற்சி இடம் பெற்றால் அதற்கு எதிராக அமைதியாக போராடுவோம் என்று அரசுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

மக்கள் போராட்டதை உருவாக்கி புகையிரத பாதைக்கு குறுக்கே நின்று உயிர் தியாகம் செய்தாவது இந்த இந்த குப்பை கூளங்களை எடுத்து வருவதற்கு எதிராக இருப்போம்.

Related posts

வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிரான மனுமீதான விசாரணை ஏப்ரல் 3 வரை ஒத்திவைப்பு!

Editor

மஹிந்தவின் இப்தாரில் கலந்துகொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

wpengine

“சகல மாணவர்களுக்கும் உயர்தரம் பிழையான முடிவு”

wpengine