பிரதான செய்திகள்

புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசின் கீழ்! அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

மன்னார் மாவட்ட கல்வித்திணைக்களத்தின் பரிபாலனத்தின் கீழ் புத்தளத்தில் இயங்கி வரும் இணைந்த பாடசாலைகளின் கல்வி வசதிகளையும் அங்கே பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளையும் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளதாகவும்  வட மாகாணசபையின் நிதிச்சுமையைக் குறைப்பதற்காகவே தாம, அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று காலை மன்னார் கச்சேரியில் இடம்பெற்ற போது இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் றிசாட் பதியுதீன் இந்த தகவலை வெளியிட்டார்.

புத்தளத்தில் அகதி மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் அமைக்கப்பட்ட இணைந்தப் பாடசாலைகளில் ஒரு சில வற்றில் சுமார் 1000 மாணவர்களும் இன்னும் சில பாடசாலைகளில் சுமார் 300 மாணவர்களும் அளவிள் கற்கின்றனர். இந்தப் பாடசாலைகளில் கணிசமான ஆசிரியர்களும் கற்பிக்கின்றனர். வட மாகாணத்தில் சமாதான சூழல் ஏற்பட்ட போதும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மக்கள் தமது தாயகத்தில் மீளக்குடியேறுவதிலுள்ள தடைகள் எல்லோருக்கும் தெரியும். எடுத்த எடுப்பில நினைத்த மாத்திரத்தில இந்தப் பாடசாலைகளை மூடிவிட்டு மாணவர்களை அந்தரத்தில் விட முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

புத்தளத்தில் இயங்கும் இந்தப் பாடசாலைகளை வட மாகாணசபை நிர்வகிப்பதால் அந்த சபை இதனால் தமக்கு பாரிய கஷ்டமென அடிக்கடி சுட்டிககாட்டி வருகின்றது. இதனாலேயே அந்தச்சபையின் சுமையைக் குறைப்பதற்காக குறிப்பிட்ட காலத்துக்கு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதென்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த சந்தர்ப்த்தில் குருக்கிட்ட இணைத்ததலைவர்களில் ஒருவாரான முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம் பி ஆன சார்ல்ஸ் நிர்மலநாதனும் அமைசச்சர் றிசாட்டை பார்த்து மத்திய அரசடன் மாத்திரம் கதைத்துக் கொண்டு பிரச்சிணைகளை தீர்த்துக்கொண்டிருக்காமல் எங்களுடனும் பேச வேண்டுமென கூறினர்.unnamed-4

இந்தப்பிரச்சினையை இழுத்தடித்துக் கொண்டு போகாமல் உரிய தீர்வை பெற்றுக்கொள்ளும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமேல் மாகாண,வடமாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகள் மத்திய கல்வியமைச்சு உயர் அதிகாரிகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரி ஆகியோர் உள்ளடங்கிய   குழுவொன்றை நியமித்து இதற்கு முடிவு கட்டுமாறும் அவர்கள் விடுத்த  கோரிக்கை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.unnamed-5

இதே வேளை அண்மைய காலங்களில் மாவட்ட அபிவிருத்திக்குழக் கூட்டங்கள் இடம்பெற்ற காலங்களில் அதல் பங்கேற்ற சார்ல்ஸ் எம் பி போன்றவர்கள் புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் பிரச்சினையை பூதாகரமாக்கியிருந்தனர் அங்குள்ள பாடசாலைகளை அவசரமான மூடி அந்த மாணவர்ளை மன்னார் மாவட்டத்துக்கு வரப்பன்னுமாறு வழியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கமை.unnamed-6

Related posts

இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகிவரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும்

wpengine

சனத் நிஷாந்தவின் நீக்கம் நியாயமற்றது- மஹிந்த

wpengine

வேலைநிறுத்தம் இல்லை! மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்.

wpengine