பிரதான செய்திகள்

புத்தளத்தில் 20வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் ஐந்து நீர்த்தேக்கங்களின் 20 வான் கதவுகள் நேற்றும், இன்றும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தெதுரு ஓயா நிர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் இரண்டு அடி வரையும், ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி வரையும், இரண்டு வான் கதவுகள் நான்கு அடி வரையும், தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் இரண்டு அடி வரையும் , நன்கு வான் கதவுகள் ஒரு அடி வரையும் , இங்கினிமிட்டிய மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் தலா இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வரையும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தெதுரு ஓயா, ராஜாங்கன, இங்கினிமிட்டிய, அங்கமுவ மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களுக்கு அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் அந்த அதிகாரி கேட்டுள்ளார்.

Related posts

ஆசிரியர்களுக்கு பெண் மாணவிகளின் தொலைபேசி இலக்கம் எதற்கு..??

wpengine

மனிதநேயமிக்க அரசியல் வாதிதான் இந்த பிரதி அமைச்சர் அமீர் அலி

wpengine

சமையல் எரிவாயுவின் விலையும் குறைகிறது!

Editor