பிரதான செய்திகள்

புதிதாக 3 நியமனங்களை வழங்க பாராளுமன்றக் குழு அங்கீகாரம்!

இரண்டு புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் புதிய தூதுவர் ஒருவரை நியமிப்பதற்கு உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ. எஸ். சத்யானந்தவின் நியமனம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் புதிய செயலாளராக எம். எம். நைமுதீனின் நியமனத்திற்கு உயர் பதவிகளுக்கான குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவராக கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவாவை நியமிப்பதற்கு உயர் பதவிகள் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

Related posts

தேசிய மக்கள் சக்தி கட்சிக்குள் தற்கொலைப் போராளிகள் ஊடுருவல்! ஞானசார தேரர் தெரிவிப்பு .

Maash

திகாமடுல்ல : எதிர்கால பிரச்சினைகளை எதிர்கொள்ள றிஷாட் அணியினர் பொருத்தமானவர்களா..?

wpengine

தேசிய மாநாட்டின் தெவிட்டாத மந்திரங்கள்

wpengine