பிரதான செய்திகள்

பீ.எஸ்.எம்.சாள்ஸ், வட மாகாண ஆளுநராக நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம்.சாள்ஸ் பதவியேற்றுள்ளார்.


இன்று இந்த பதவியேற்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது வட மாகாண ஆளுநர் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில், சுகாதார அமைச்சின் செயலாளராக செயற்பட்டு வந்த பீ.எஸ்.எம்.சாள்ஸ், வட மாகாண ஆளுநராக நியமிப்பது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வருட இறுதிக்குள் மாகாண சபை தேர்தலை நடாத்த அரசு தீர்மானித்துள்ளது.

wpengine

தாமரை மொட்டு,சுதந்திரக் கட்சியின் உதவியுடன் அமைச்சர் றிஷாட் வசம் முசலி பிரதேச சபை

wpengine

அப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பு iPad Pro 9.7

wpengine