செய்திகள்பிரதான செய்திகள்

பிள்ளையானை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு .

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கடந்த செவ்வாய்க்கிழமை (08) மாலை மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து  குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கட்சியைப் பாதுகாக்க முன்வர வேண்டும்! ரவூப் ஹக்கீம் (விடியோ)

wpengine

பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் புதிய கட்டுப்பாடுகள்

wpengine

மன்னார்- யாழ் பிரதான வீதியில் வாகனம் விபத்து! இருவர் காயம்

wpengine