செய்திகள்பிரதான செய்திகள்

பிள்ளையானின் விடுதலைகோரி கையெழுத்து வேட்டை..!

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழையில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான என்ற சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யக் கோரி கையெழுத்து வேட்டையொன்று வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்டது.

முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டியும் நீதியான விசாரணை நடத்த கோரியும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க கோரியும் இது தொடர்பில் ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த கையெழுத்து பெறும் நிகழ்வு பேத்தாழை பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்டது.

இக் கையெழுத்து நடவடிக்கையானது மாவட்டத்தில் பல இடங்களிலும் இடம்பெறவுள்ளதாக கோறளைப்பற்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் நவராசலிங்கம் நிமல்ராஜ் தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது.

அந்த மகஜரில், “எமது தாய் நாட்டின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஆபத்துக்குள்ளாகி இருந்த வேளையில் அவற்றை மீட்டெடுக்க அவர் போன்றவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று மறக்கப்பட்டால் எதிர் காலத்தில் சிறுபான்மை இனங்களில் இருந்து இவ்வாறான தேச பக்தர்கள் எவ்வாறு தோன்ற முடியும் என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை நேசிக்கும் சகலரும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்”. ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பும் மகஜரில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே சந்திரகாந்தன் மீதான விசாரணைகள் அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடத்தப்படுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மு.கா. பேச்சுவார்ததையில் இணக்கம் : கலீல், இல்யாஸின் இடைநிறுத்தம் நீக்கம்?

wpengine

பரீட்சைப்பெறுபேறுகள் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பப்படுமா ? ஜனாதிபதி,பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்

wpengine

மன்னார் மக்களுக்கான அறிவித்தல் மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

wpengine