செய்திகள்பிரதான செய்திகள்

பிள்ளையானின் வழக்கானது, சட்டத்தரணி உதய கம்மன்பில பேசும் முதல் வழக்காக இருக்கும். – டில்வின்

பிள்ளையானின் வழக்கானது, சட்டத்தரணி  உதய கம்மன்பில பேசும் முதல் வழக்காக இருக்கும். ஒருவேளை அது கடைசி வழக்காகவும் இருக்கலாம் என பேருவளையில் இடம்பெற்ற விசேட மக்கள் சந்திப்பில் ஜேவிபி- யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா சாடியுள்ளார்.

பிள்ளையானின் வழக்கானது, சட்டத்தரணி  உதய கம்மன்பில பேசும் முதல் வழக்காக இருக்கும். ஒருவேளை அது கடைசி வழக்காகவும் இருக்கலாம்.

பிள்ளையானை அழைத்து வந்தபோது என்ன நடந்தது? முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தொலைபேசியிலிருந்து அழைப்பை மேற்கொண்டு, அவரிடம் தொலைபேசியைக் கொடுக்குமாறு சிறைஅதிகாரியிடம் கேட்டுள்ளார்.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மட்டுமே பிள்ளையைச் சந்திக்க முடியும். இவர்கள் நெருங்கிய உறவினர்கள் அல்ல.

அப்படியானால் அடுத்த வாயப்பு  முறை என்ன, சட்டத்தரணி என்ற அடிப்படையே?

கம்பன்பில ஒரு சட்டத்தரணி என்றாலும், நாமல் ராஜபக்சவைப் போல அவர் தனது வாழ்க்கையில் ஒருபோதும் நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் வாதிட்டதில்லை.

யாரோ ஒருவர் நகைச்சுவையாக பேஸ்புக் பக்கத்தில் இடுகையிடப்பட்டிருப்பதைக் கண்டேன்.

பிள்ளையான் ஏன் அழுதார்? அதாவது பிள்ளையானின் சட்டத்தரணி உதய கம்மன்பில என்பதை அறிந்தவுடனேயே அவர் அழுதார். வழக்கு தோற்கடிக்கப்படும் என்ற பயத்திலேயே அவர் அழுதார் என அந்த பதிவாளர் கருத்து தெரிவித்திருந்தார்.

Related posts

31வது தேசிய விளையாட்டு முதலிடம் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த றிஷாட்

wpengine

பழைய தகவல்களை பேஸ்புக் தரும் புதிய வசதிகள்

wpengine

ஜனாதிபதி தேர்தல் குறித்து கொழும்பு அரசியலில் மும்முனை போட்டி

wpengine