பிரதான செய்திகள்

பிர்தௌஸ் பாடசாலை உள்ளக வீதி

(அனா)

மட்டக்களப்பு மாவட்டத்தின்காத்தான்குடி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள பிர்தௌஸ் பாடசாலை உள்ளக வீதியினை புனரமைப்பு செய்வதற்காக கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் அவ்வீதி உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேட்கொள்ளபட்டு வருகின்றன. இவ்வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது. மேலும் மழை காலங்களில் அதிகளவான மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களும் அவ்வீதியினை பயன்படுத்துகின்றவர்களும் பாரிய இடர்களுக்கும், அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.

இவ்வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து மக்கள் பங்களிப்புடன் இவ்வீதியினை புனரமைக்க கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் இவ்வீதியானது உள்வாங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் அமல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மோற்கொள்ளப்பட்டு வருவதோடு, இத்திட்டத்திற்காக ரூபா 10 இலட்சம் நிதியொதிக்கீடு செய்யப்பட்டு கொங்ரீட் வீதி இடப்பட இருக்கின்றது.

இவ்வீதியானது சிறந்த முறையில் நீர் தேங்கி நிற்காமல் வடிந்தோடக்கூடிய முறையிலும் சிறந்த தரமுள்ள கொங்ரீட் கலவைகள் இடப்பட்டு இவ்வீதி அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நகர சபையின் தொழிநுட்ப  உத்தியோகத்தர்களுடன்  உரிய இடத்திற்கு கள விஜயமொன்றினை மேற்கொண்டார்.unnamed (4) unnamed (2)

இதன்போது இவ்வீதியினுடைய நிலைமைகளை எடுத்துரைத்துஅதற்கான ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வழங்கினார்.unnamed (3)

Related posts

ஐக்கிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு போட்டு

wpengine

பிரதேச சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ.மு.காங்கிரஸ் ஆசனங்களை வென்றெடுக்கும் ஹக்கீம்

wpengine

விஜயகலாவுக்கு என்ன தண்டனை என்பதை நாம் அவதானித்துக்கொண்டே இருக்கின்றோம்.

wpengine