பிரதான செய்திகள்

பிரிவினைவாதத்தை தூண்டாமல் ஒற்றையாட்சி அடிப்படையில் தீர்வைப் பெற விக்னேஸ்வரன் முயற்சிக்க வேண்டும்!

மாநிலம் மற்றும் சமஷ்டி என்ற சொற்களுக்கு இலங்கையில் இடம் இல்லை. ஒற்றையாட்சிஅடிப்படையிலான தீர்வுத்திட்டம் தொடர்பில் பேசுவதையே பொது எதிரணி ஆதரிக்கும். இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், பொது எதிரணியின் நாடாளுமன்றஉறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு எதிராகவே பொது எதிரணி செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவிடம்வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையில் தமிழ் மக்கள் வடக்கு மாகாணத்தில் மாத்திரமே பெரும்பான்மையாக வாழுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என மூவின மக்களும் வாழ்கின்றனர். அதேபோல், கொழும்பு மற்றும் மலையகத்திலும் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர்.

எனவே, விக்னேஸ்வரன் கூறுவது போல் எவ்வாறு இலங்கையை இரண்டு மாநிலங்களாகப் பிரிக்க முடியும்?

சமஷ்டி மற்றும் மாநிலம் என்பவை இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்குப் பொருந்தும்.

அவ்வாறு இலங்கையிலும் செய்யத் தூண்டுவதை அடியோடு நிராகரிக்கின்றோம்.

வடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்ட வரைபை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அதற்கு எதிராகவே நாங்கள் செயற்படுவோம்.

இலங்கை ஒற்றையாட்சி நாடாகும். ஒற்றையாட்சி அடிப்படையில் நியாயமான தீர்வை வழங்கஎதிர்ப்புத் தெரிவிக்கமாட்டோம்.

அதனைப் புரிந்துகொண்டு பிரிவினைவாதத்தைதூண்டாமல் ஒற்றையாட்சி அடிப்படையில் தீர்வைப் பெற வடக்கு மாகாண சபைமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முயற்சிக்க வேண்டும்; செயற்படவேண்டும் என்றார்.

Related posts

சிலாவத்துறை வைத்தியசாலை சிறுவர் நோயாளர் விடுதியினை திறந்து வைத்த வடமாகாண சுகாதார அமைச்சர்

wpengine

சமூகத்தை ஹக்கீம் கருவறுப்பது புரிகிறதா?

wpengine

எதிர்நீச்சல் போட்டே மக்கள் பணியாற்ற வேண்டியிருக்கின்றது- அமைச்சர் றிசாத்

wpengine