பிரதான செய்திகள்

பிரியந்த குமாரவின் வீட்டிற்கு சஜித் பிரேமதாசவினால் தலா 1 மில்லியன் ரூபா நிதி

பாகிஸ்தானின் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) சென்றுள்ளார்.

இதன்போது, பிரியந்தவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக சஜித் பிரேமதாசவினால் தலா 1 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பிள்ளையின் கல்விக்காக மடிக்கணினி ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மறைந்த பிரியந்த குமாரவின் கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து கண்காணித்து வருவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நியாயமான விசாரணையின் மூலம் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரியந்த குமாரவின் இரு பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொள்ள தேவையான உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

Related posts

ரிஷாட் பதியுதீன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட 7 பேருக்கும் செப். 21 வரை வி.மறியல் நீடிப்பு!!!

wpengine

தனக்கு நீதியை பெறமுடியாத றிஷாதால், எப்படி நீதியை வளைக்க முடியும்…?

wpengine

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கு தடையாக இருப்பது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே!

wpengine