பிரதான செய்திகள்

பிரியந்த குமாரவின் மரணம் நீதியைப் பெற்றுத்தருமாறு ஐ.நா சபையை நாம் வலியுறுத்துகின்றோம்.

பிரியந்த குமாரவின் மரணம் தொடர்பாகச் சர்வதேச தலையீட்டுடன் அவருடைய மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறு ஐ.நா சபையை நாம் வலியுறுத்துகின்றோம் என ஜம்புரேவெல சந்திரரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றையதினம் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களுக்கு ஒரு விடயத்தைக் கூறியிருந்தார். இந்த இளைஞர்கள், அவர்களுடைய உத்வேகம் காரணமாகவும், அவர்களுடைய சிந்தனை காரணமாகவும், மதம் குறித்த பற்றுதல் காரணமாகவும் இப்படியான விடயங்களில் ஈடுபடும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாமும் இளம் வயதில் இப்படி தான் இருந்தோம், ஆகவே இவற்றைப் பெரிதாக எடுக்கத் தேவையில்லை என இந்த கொலையைச் சாதாரணமாக்கும் வகையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஒரு நாட்டில் வாழும் ஒரு பிரஜையின் உரிமைகள் வேறு நாட்டில் வாழும் பிரஜையால் பறிக்கப்படும் போது அந்த உரிமைகளை பாதுகாப்பதற்கே ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்கள் உருவானது.

ஆனால் பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் ஐ.நா சபையோ அல்லது வேறு எந்த சர்வதேச அமைப்புக்களுமே இதுவரை எந்தவொரு அறிக்கையினையும் வெளியிடவில்லை.

ஆகவே நீங்கள் சார்த்திருப்பது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்காகவா அல்லது சாதாரண அப்பாவி குடி மக்களுக்காகவா? என ஐ.நா அமைப்பிடம் நாம் கேள்வியெழுப்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார். 

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள், இதுவரை எந்த தீர்மானமும் இல்லை. !

Maash

பேரின வாதிகளும்,குறுகிய சிந்தனையாளர்களும் அமைச்சர் றிஷாட் பதியுதீனை குறை கூறியும், கொக்கரித்தனர்.

wpengine

பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் (SP) சிறிதத் தம்மிக்க சுட்டுக் கொலை!

Maash