பிரதான செய்திகள்

பிரயோசம் அற்ற முசலி-அகத்திமூரிப்பு பஸ் தரிப்பிடம்! வடமாகாண அமைச்சரே! உங்களின் கவனத்திற்கு

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட முருங்கன் பிரதான சந்தியில்  இருந்து அகத்திமூரிப்பு சந்திக்கு இடைநடுவில் அமைக்கபட்டுள்ள பயணிகள் பஸ் தரிப்பிடம் போக்குவரத்துக்கும்,பிரயாணிகளுக்கு பிரயோசனம் அற்ற நிலையில் அமைக்கபெற்றுள்ளதாக முசலி பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முசலி பிரதேசத்தில் பயணிகள் பஸ் தரிப்பிடம் அமைக்கபெற வேண்டிய எத்தனையே! முக்கிய சந்திகள் இருந்தும் யாருக்கும் பிரயோசனம் அற்ற நிலையில் பல லச்சம் ரூபா மக்கள் பணத்தினை வீண்விரயம் செய்யும் நோக்குடன் வடமாகாண போக்குவரத்து அமைச்சு இதனை நிர்மாணித்து உள்ளது.

வடமாகாண போக்குவரத்து அமைச்சரே!,செயலாளரே! முசலி பிரதேசத்தில் அபிவிருத்திகளை செய்கின்ற போது முசலி பிரதேசத்தில் இருக்கின்ற சமூக மட்ட அமைப்புகள்,பள்ளி நிர்வாகிகளுடன் தொடர்புகளை பேணி அபிவிருத்திகளை செய்கின்ற போது மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததாக அமையும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இந்த பயணிகள் பஸ் தரிப்பிடம் அமைக்கபெற்று சுமார் ஐந்து மாதங்கள் ஆகியும் இதுவரைக்கும் இந்த தரிப்பிடத்தில் பஸ் நிறுத்தவும் இல்லை,இதில் இருந்து எந்த பயணிகளும் போக்குவரத்து செய்ய வில்லை என முசலி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.c0f712ec-6e62-4366-96a4-c4f38346eeb2f95f1b02-2bea-4184-b7a6-bf29f38527d7

8d235e44-540c-40f5-91cb-296c3ee1217c

1faddf41-7003-4714-9fae-7ea80f13db8f

3bd9f58c-6179-4bd9-bdb3-3541358c787d

Related posts

புதிய தேர்தல் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Editor

வவுனியா வர்த்தக சங்கம் வேண்டுகோள்

wpengine

யாழ்,கிளிநொச்சி,வவுனியா சில இடங்களில் மின் தடை

wpengine