பிரதான செய்திகள்

பிரம்பால் அடித்த 9வயது சிறுமி மரணம்

மீகஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மத சடங்கொன்றின் போது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் மத சடங்கினை மேற்கொண்ட பெண் இன்று (01) மஹர நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத சடங்கினை மேற்கொண்ட பெண் குறித்த சிறுமியை பிரம்பால் அடித்துள்ள நிலையில் தெல்கொட மீகஹவத்தை பிரதேசத்தை சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ரிப்கா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (01) ராகமை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் ​மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்றுமுதல் இனிமேல் தினசரி மின்வெட்டு இல்லை – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு

Maash

மர்ஹூம் பாயிஸின் மறைவு பெரும் இழப்பு – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனுதாபம்!

wpengine

பிரதமர் போட்டி! சஜித்துக்கு பதிலடி கொடுத்த ரணில்

wpengine