பிரதான செய்திகள்

பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு! குரங்கள் அடையும் வீடுகள்

இறுதி யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறிய நிலையில் இது வரையில் நிரந்தர வீடுகள் வழங்கப்படவில்லை என ஒட்டுசுட்டன் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், பிரதேச செயலகம் குரங்குகளுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

2011ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் போது எமக்கு தற்காலிக வீடுகள் மட்டுமே வழங்கப்பட்டன.

அதன் பின்னர் எங்களுடைய பிரதேச செயலகத்தின் ஊடாக கட்டம் கட்டமாக நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டன.
ஆனாலும் வழங்கப்பட்ட பெருமளவான வீடுகளில் மனிதர்கள் குடியிருக்கவில்லை குரங்குகள் தான் குடிகொண்டுள்ளன.

குறித்த வீட்டு உரிமையாளர்களின் பதிவு மட்டுமே இந்த பிரதேசத்தில் இருக்கின்றது. ஆனால் அவர்கள் வெளியிடங்களில் இருக்கின்றார்கள்.

இவ்வாறு அவசியமறவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டும், அவசியமான எமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாமலும் இருக்கின்றது.
மேலும், எமது இந்த துன்ப நிலையை மீள்குடியேற்ற அமைச்சு உணர்ந்து எமக்கு வீடுகளை வழங்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்திற்கு எவ்வித வரியும் அறவிடப்பட மாட்டாது: நிதி அமைச்சு

wpengine

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை

wpengine

படுகொலை குற்றச்சாட்டு! பிரதி ஜனாதிபதி 15வருட சிறைத்தண்டனை

wpengine