பிரதான செய்திகள்

பிரதேச அபிவிருத்தி மையங்களாக சனசமூக நிலையங்கள் மாறவேண்டும் – தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர்

பொழுது போக்கிற்கு பத்திரிகை வாசிக்கும் நிலையங்களாக மட்டுப்படாமல் சமூக, பிரதேச அபிவிருத்திமையங்களாக சனசமூக நிலையங்கள் மாறவேண்டும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார்.

அண்மையில் நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிந்தவூர் பிரதேசஅபிவித்தி தொடர்பான, நிந்தவூர் சனசமுக நிலையங்களுக்கிடையிலான கலந்துரையாடலில்கலந்துகொண்டு பேசும்போதே மேற்கண்டவாரு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நிந்தவூரை பொறுத்தவரையில் 25 சனசமூக நிலையங்கள் பதியப்படவேண்டும் ஆனால் இப்போது 9 நிலையங்களே பதியப்பட்டுள்ளன. பதியப்பட்டுள்ள அனைத்தும் சிறப்புறஇயங்குகின்றனவா என்றால் இல்லையென்றே கூறவேண்டியுள்ளது.

சனசமூக நிலையங்கள் வினைத்திறனாக இயங்குவதற்கான பூரண ஒத்துழைப்பினை பிரதேச சபைசெய்துவருகின்றது இனியும் செய்யும். சனசமூக நிலையங்களை நடாத்தும் நீங்கள் சமூக> பிரதேசஅபிவிருத்திகளை கருத்திற்கொண்டு எதிர்காலங்களிலும் செயற்படவேண்டும் என்பதே எமதுஎதிர்பார்ப்பு.

எதிர்வரும் காலங்களில்  கூடுதலான அபிவிரத்திப் பணிகள் சனசமூக நிலையங்கள் ஊடாகவேமேற்கொள்ள வேண்டியுள்ளதால் தத்தம் பிரதேச அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு சனசமூகநிலையங்கள் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும்.

பதியப்பட்டுள்ள சனசமூ நிலையங்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதோடு அவை சிறப்புறஇயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் அனைவரும்  இணைந்தே மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் நிந்தவூரில் பதியப்பட்ட அனைத்து சனசமூக நிலைய நிர்வாகிகள்,  மற்றும்சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பீ மௌலானா ஆகியோரும் கலந்துகொண்டமைகுறிப்பிடத்தக்கது.

Related posts

சம்பா கிலோ 80/- பச்சையரிசி கிலோ 70/- நாடு கிலோ 72/-அதிகரித்து விற்போருக்கு உரிய கடும் நடவடிக்கை என ரிஷாட் எச்சரிக்கை.

wpengine

வடகொரியாவுக்கு எதிராக இலங்கை

wpengine

சமுர்த்தி வழங்கிய விடயத்தில் அரசியல்வாதிகள் உரிமை கோரமுடியாது.

wpengine