பிரதான செய்திகள்

பிரதமர் பதவியை எவரும் குழிதோண்டிப் பறிக்க முயலமாட்டார்கள்.

வீண் வதந்திகளைப் பரப்பி ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்கலாம் எனக் கனவு காண வேண்டாம் என மஹிந்த அணியினரிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான சதி முயற்சிகள் அக்கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளன என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் செய்தியாளர் ஒருவர் பிரதமர் ரணிலிடம் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. எனது பிரதமர் பதவியை எனது கட்சிக்குள் இருக்கும் எவரும் குழிதோண்டிப் பறிக்க முயலமாட்டார்கள்.

வீண் வதந்திகளைப் பரப்பி ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்கலாம் எனக் கனவு காண வேண்டாம் என மஹிந்த அணியினரிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை

wpengine

மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்து (படங்கள்)

wpengine

68 வருடங்களுக்குப் பின் Supermoon இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்.

wpengine