செய்திகள்பிரதான செய்திகள்

பாலஸ்தீன மக்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்..!

பாலஸ்தீனத்தில் நடத்தப்படுகின்ற போர் குற்றங்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொலுகையை அடுத்த்து கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தில் கொல்லப்படுகின்ற பொது மக்களுக்கு நீதியும் சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்று பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மீராவோடையில் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.

மட்டக்களப்பு மீராவோடை இளைஞர்களின் ஏற்பாட்டில், மீராவோடை ஜும்மா தொழுகையின் பின் மீரா ஜும்மா பெரிய பள்ளிவாசல் முன்பாக ஒன்று கூடி கவனயீர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர்.

இதன்போது பாலஸ்தீன மக்களுக்கு நீதி கோரி பதாதைகளை ஏந்தியவாறும் இஸ்ரேலுக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும் கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.

Related posts

சாணக்கியனுக்கு கல்முனை நீதி மன்றம் அழைப்பாணை

wpengine

பள்ளி மாணவிகள் உடை மாற்றும் போது ரகசியமாக வீடியோ

wpengine

எமது அனுமதியின்றி கிழக்கு மாகாண சபையைக் கலைக்க முடியாது

wpengine