கட்டுரைகள்பிரதான செய்திகள்

பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம் சமூகத்தின் வாக்களிப்பும்

நாட்டின் எட்டாவது பாராளுமன்றம் நேற்று முன்தினம் 2 ஆம் திகதி நள்­ளிரவு 12 மணியுடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவினால் கலைக்கப்பட்டுள்ளது. அதற்கான விஷேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.


அரசியலமைப்பில் 70 ஆவது பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்­பட்டுள்ள அதிகாரம் மற்றும் 1981 ஆம் ஆண்டின் இல.1 பாராளுமன்ற வாக்­கெடுப்புச் சட்டத்தின் விதிகளுக்க­மையவே பாராளுமன்றம் கலைக்கப்­பட்டுள்ளது.


நேற்று முன்தினம் நள்ளிரவு அரச அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விஷேட வர்த்தமானி அறிவித்தலின் படி ஒன்பதாவது பாராளுமன்றத் துக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்­ளது. அத்தோடு வேட்புமனுத் தாக்­கல் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி பகல் 12 மணிவரை இடம்­பெறவுள்ளது.

அத்துடன் ஒன்பதா­வது பாராளுமன்றத்தின் முதலா­வது சபை அமர்வு மே மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக பாராளுமன்றத்தை நான்கரை வரு­டத்தின் பின்பே ஜனாதிபதி­யினால் கலைக்கமுடியும். கடந்த பாராளுமன்றத் தேர்தல் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்றது.

அந்த வகையிலே நேற்று முன்தினம் நள்ளிரவுடன் நான்கரை வருடங்கள் பூர்த்தியாகி­யுள்ளன.
இலங்கை பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்கள் வாக்காளர்களினால் தெரிவு செய்யப்படவேண்டும். 196 உறுப்பினர்கள் மாவட்ட ரீதியில் வாக்­காளர்களினால் நேரடியாகவும் 29 உறுப்பினர்கள் தேசியப்பட்டிய லூடாகவும் தெரிவு செய்யப்பட­வுள்ளனர். அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தேசிய ரீதியில் பெறுகின்ற வாக்குக­ளைக்கொண்டு கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்ப­தற்கு ஒரு கட்சி அல்லது கூட்டணி 113 ஆசனங்களைப் பெற்றாக­வேண்டும்.
19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிர­காரம் எட்டாவது பாராளுமன்றம் 5 வருட பதவிக்காலத்தைக் கொண்டி­ருந்தது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறி­சேன பாராளுமன்றத்தைக் கலைப்ப­தற்கு கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் திகதி விஷேட வர்த்தமானி அறி­வித்தல் ஒன்றை வெளியிட்டார். எனினும் அதற்கெதிராக உயர்நீதி­மன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்­டன.

பதவிக்காலம் 4 ½ வருடங்கள் பூர்த்தியாக முன்பு பாராளுமன்­றத்தைக் கலைக்கமுடியாது என்றே மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி சட்டவி­ரோதமானது எனத் தீர்ப்பளித்தது. இதனடிப்படையிலே பாராளு­மன்றம் நான்கரை வருடத்தின் பின்பு கலைக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைய­டுத்து அரசியல் களநிலைமை சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்­சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடும் நிலைமை உருவாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம­தாச தலைமையிலான கூட்டணி­யொன்று ‘ஐக்கிய மக்கள் சக்தி’ என்ற பெயரில் உதயமாகியுள்ளது.


10 அரசியல் கட்சிகள், 18 தொழிற்சங்­கங்கள், 20 சிவில் அமைப்புகள் ஒன்­றிணைந்து இக்கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று முன்தினம் கைச்சாத்திடப்­பட்டுள்ளது. இக்கூட்டணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கொண்டுள்ளன. இக்கூட்­டணியின் சின்னம் இதுவரை தீர்மா­னிக்கப்படவில்லை.


இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தலில் யானைச் சின்­னத்தில் களமிறங்கவுள்ளதாக அக்கட்­சியின் உபதலைவர் ரவி கருணாநா­யக்க தெரிவித்துள்ளார். இந்நி­லையில் ஐக்கிய தேசியக் கட்சி பிள­வுபடும் ஆபத்தை எதிர்நோக்கி­யுள்ளது. ஐக்கிய தேசியக் கட்­சியின் சார்பில் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக வேட்பு­மனு சபையொன்றும் நிறுவப்பட்­டுள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டு இரு அணிகளாகக் களமிறங்கினால் ‘ஐக்கிய மக்கள் சக்தி’ எனும் கூட்டணியில் இணைந்து அக்கூட்டணியின் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்குப் பாதிப்பாக அமையலாம். ஏனென்றால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பிளவுபட்டு வாக்களிக்கும் நிலை உருவாகும். இவ்வாறான நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் ஆராயலாம் அல்லது கூட்டணியொன்றினை அமைத்துப் போட்டியிடலாம்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலமே முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.-

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் – உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!

Editor

சதொச நிறுவனத்துக்கு கொக்கெயின் கொண்டுவரப்பட்டது எவ்வாறு?

wpengine

வடக்கில் அகதிகள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் : முஸ்லிம்ளை மறந்த விக்னேஸ்வரன்

wpengine