பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் நளின் நேரில் வர வேண்டும் நான் பதில் கொடுப்பேன்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவையும் கட்டி கடலில் போட வேண்டும் எனக் கூறிய நளின் பண்டார நேரில் வந்து பேச வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, “வடக்கிலுள்ள விக்னேஸ்வரன் போன்ற இனவாதிகளும், தெற்கிலுள்ள வீரவங்ச போன்ற இனவாதிகளும் இன்று ஒருமூலைக்குள் முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் வடக்கிலும், தெற்கிலும் மூலையில் ஒதுங்கியிருக்கும் இனவாதிகளை சேர்த்துக்கட்டி நடுக்கடலில் தள்ள வேண்டும்” என கடுமையாக சாடியிருந்தார்.

இது தொடர்பில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளிக்கும் போதே நளின் பண்டார நேரில் வந்து பேசுவாராயின் பலவற்றில் தெளிவடைந்து கொள்வார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் எவை நடந்தவை. எதற்காக அவை நடந்தவை என்பவை தொடர்பில் நாம் கலந்தாலோசித்தால் எல்லாமே தெளிவாகும். அவர் என்னுடன் கலந்தாலோசித்தால் எனக்கு எதிராகக் குரல் கொடுக்க மாட்டார் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் அனுரகுமார கைச்சாத்திட்டனர்.

wpengine

சூழ்ச்சி செய்தவர்களின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை

wpengine

ஒலுவில் மு.கா முக்கியஸ்தரான ஆசிரியர் ஹமீட் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்!

wpengine