பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினருக்கு சொகுசு வாகனம்!மீள் பரிசீலனை செய்ய வேண்டும

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 79 பேருக்கு தீர்வை வரியற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜினவங்ஸ தேரர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


“மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ள தருணத்தில் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது சிறந்ததா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


தேங்காயை 100 ரூபா கொடுத்து வாங்க முடியாத மக்கள், பாதித் தேங்காயை வாங்கிச் செல்கின்றனர். அரிசி, பருப்பு போன்ற உலர் உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஜனாதிபதி அறியாத விடயமல்ல.


பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக மக்களுக்கு குறுகிய கால நிவாரணமளிக்க முடியாதென அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் கூறியுள்ளனர்.
கொரோனா நிலைமைக்கு மத்தியில் சுமார் 3 இலட்சம் பேர் தொழிலை இழந்துள்ளனர். பல தொழிற்சாலைகள் ஊழியர்களுக்கு பாதி சம்பளத்தை வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.


இத்தகைய பின்புலத்தில் உறுப்பினர்களின் சொகுசை விட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பயணிக்குமாறு ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதியிடம் கோருகின்றது.


இந்த வருடம், உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியையேனும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்களுக்கு மக்கள் சார்பாக ஏதேனுமொரு நிவாரணத்தை திட்டமிடும் இயலுமை ஏற்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கற்பிட்டி பிரதேச மீனவர்களுக்காக கடற்தொழில் பிரதி அமைச்சரை சந்தித்த ஆஷிக்

wpengine

காத்தான்குடி –அல்-ஹஸனாத் வித்தியாலத்தின் சிறுவர் தடகள விளையாட்டு விழா

wpengine

அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு தினம்

wpengine