செய்திகள்பிரதான செய்திகள்

பாப்பரசர் புகழுடலுக்கு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் அஞ்சலி செலுத்தினார்.

பாப்பரசர் தனது 88ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின்  புகழுடலுக்கு, இன்று (24) கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித்  அஞ்சலி செலுத்தினார்.

பாப்பரசரின் புகழுடல் பொது மக்கள் அஞ்சலிக்காக அரச மரியாதையுடன் வத்திகானிலுள்ள சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் சனிக்கிழமை (26) பாப்பரசரின் இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளன.

மேலும் புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Related posts

துமிந்தவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்த பந்துல

wpengine

முசலி பிரதேசத்திற்கான களவிஜயம் மேற்கொள்ளும் முன்னால் அமைச்சர்

wpengine

புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் சிறப்பு ரயில் சேவை..!

Maash