செய்திகள்பிரதான செய்திகள்

பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்??????

உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை 57.9 புள்ளிகளுடன் 59வது இடத்தை பிடித்துள்ளது.

குற்ற விகிதம், பொது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி (Numbeo Safety Index) 2025-ம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக ஐரோப்பிய நாடான அன்டோரா உள்ளது.

நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி அன்டோரா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன், ஐல் ஆப் மேன் (ஐரிஸ் கடல் தீவு), ஹாங்காங் (சீனா), ஆர்மீனியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

147 நாடுகளில்  இலங்கை 57.9 புள்ளிகளுடன் 59வது இடத்தை பிடித்துள்ளது. 

தெற்காசிய நாடுகளில், சீனா 76.0 புள்ளிகளுடன் 15-வது இடத்திலும், இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66-வது இடத்தையும் பிடித்துள்ளது. பாகிஸ்தான் 65-வது இடத்தையும், வங்கதேசம் 126-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த தரவரிசையில் 19.3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில், அதாவது மோசமான பாதுகாப்பு கொண்ட நாடாக வெனிசுலா உள்ளது.

Related posts

பயங்கரவாத தடுப்பு, விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

wpengine

10 இலட்சம் ரூபா சன்மானம் , போலீசாரின் அறிவித்தல் .

Maash

அமெரிக்கா பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால்வை சந்தித்த அமைச்சர் றிசாட் (படம்)

wpengine