பிரதான செய்திகள்

பாடகர் இராஜ் வீரரத்னவின் முகநூல் பதிவு! பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு

நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக தவறான புரிதலை ஏற்படுத்தும் நோக்கிலும், முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையிலும் பதிவிட்டுள்ளதாக கூறி, பாடகர் இராஜ் வீரரத்னவுக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தாய் நாட்டை பாதுகாக்கும் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர்களால் கையெழுத்திடப்பட்டு இந்த முறைப்பாடு பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

பிரியந்த குமாரவின் படுகொலை தொடர்பில் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இராஜ், “2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைந்திருந்தால் நாட்டுக்கு இந்த நிலைமையே ஏற்பட்டிருக்கும். இதுவே உண்மை.”  என குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவானது நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் என்பதோடு, இன, மதங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கும். இது பொதுமக்களின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெறுப்பை தூண்டும் பிரசாரம் என தாய் நாட்டை பாதுகாக்கும் ஒன்றியம் குற்றம்சுமத்தியுள்ளது.

எனவே இது தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளது. 

Related posts

முசலியின் மீள்குடியேற்றம் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான பல முனை சவால்கள்

wpengine

“அஸ்ரப் சிஹாப்தீன்” எனும் இலக்கிய ஆளுமை. (“Ashraf cihaptin” the literary personality.)

wpengine

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு! உபகரணங்கள் வழங்கவில்லை

wpengine