பிரதான செய்திகள்

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணத்தை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கணக்கீட்டு நடவடிக்கைகள் முடிந்ததும், பேருந்து கட்டண திருத்தம் அமல்படுத்தப்படுமா இல்லையா என்பதை அறிவிப்போம் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு லீற்றர் டீசல் விலையில் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் கட்டணத்தை குறைக்க முடியாது என அச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியா பாரதி முன் மாதிரித்தோட்டம் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

wpengine

நான் கோத்தா! மஹிந்த,சந்திரிக்கா போன்று செயற்பட முடியாது

wpengine

6 உறுப்பினருக்கு 477 பேர் வன்னியில் தேர்தலில் போட்டி

wpengine