பிரதான செய்திகள்

பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை! நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை. அவர்தான் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், அவருக்குப் பதிலாக வேறு உறுப்பினர்கள் பதில் கூறி வருகின்றனர். நிதி அமைச்சரைச் சபைக்கு வரச் சொல்லுங்கள். இல்லையென்றால் சபாநாயகர் நிதி அமைச்சருக்குக் கட்டளை அனுப்புங்கள்.

-இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார். 

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணியளவில் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி.,

நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. டிசம்பர் 10ஆம் திகதியே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபையில் உரையாற்றினார். அதன்பின்னர் நாட்டின் நிதி நிலைவரம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தவில்லை. 

எனவே, நாடாளுமன்றம் வந்து தெளிவுபடுத்துமாறு, நிதி அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிடவேண்டும் – என்றார்

Related posts

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு பலர் விசனம்

wpengine

அரசாங்கத்திற்கு பொதுத் தேர்தலில் எந்த வகையிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியாது

wpengine

மாகாண சபை தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் கரு

wpengine