பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பழமையான நாணயக்குற்றிகளை விற்பனை செய்ய முயன்ற மன்னார் இளைஞர் கைது!

புதையலில் இருந்து கிடைக்கப் பெற்ற பழமையான தொல்பொருள் நாணயக் குற்றிகள் எனக் கூறி, நாணயக்குற்றிகள் சிலவற்றை விற்பனை செய்ய முயன்ற இளைஞர் ஒருவரை மன்னார் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் நேற்று (22) மாலை கைது செய்துள்ளனர்.

இதன்போது, தொல்பொருள் நாணயம் என கூறப்படும் 257 நாணய குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனிடம் மன்னார் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், விசாரணையின் பின் குறித்த இளைஞன் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட நாணயக்குற்றிகளும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

லெம்பட்

Related posts

முதலமைச்சர் நஷீர் அஹமட் எதிராக இன்று நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

wpengine

ஜனவரியில் தேர்தல் நடாத்த வாய்ப்பு! ஐ.தே.க.தயார்

wpengine

இத்தாலியில் அதிகளவிலான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்கள்.

Maash