மன்னார்- பள்ளமடுவில் அமைக்கப்பட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலகப் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
வட மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த கட்டடத்தை வடமாகாண சுகாதார அமைச்சர் கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.ஏ.நியாஸ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.