இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தங்களுடைய பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ். பலாலி வசவிளான் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலாலி தெற்கு, பலாலி, வசாவிளான், தோலகட்டி ஆகிய கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
சொந்த நிலத்திலிருந்து வெளியேறி 30 வருடங்களாக தனியார் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தாம் வாழ்ந்து வருவதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.