உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பலத்த மழை காரனமாக 45 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் பலத்த மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் இம்மழை வீழ்ச்சி காரணமாக நேற்று வரையும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ​இம்மழை வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலை காரணமாக பலுசிஸ்தானில் 4 பேரும், கைபர்-பக்துன்க்வாவில் இரண்டு பேரும், பஞ்சாபில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் மரணமடைந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த 26ஆம் திகதி முதல் மழை பெய்து வருகிறது.

இம்மழை வீழ்ச்சியினால் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாபில் 13 பேரும், சிந்துவில் ஏழு பேரும், பலுசிஸ்தான் மாகாணத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் பஞ்சாபில் 39 பேர் காயம் அடைந்தனர். சிந்துவில் 16 பேரும், கைபர் பக்துன்க்வாவில் 11 பேரும், பலுசிஸ்தானில் 2 பேரும் காயம் அடைந்தனர்.

50 வீடுகள் முற்றிலும் சேதடைந்துள்ளதோடு 39 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்படுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புகையிரத கடவையில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞர் புகையிரதத்தில் மோதி பலி..!

Maash

தமிழகத்தின் புதிய முதல்வராகிறார் பழனிச்சாமி

wpengine

வடக்கில் வீடு கட்ட வசதி இல்லாதவர்களுக்கு, வீடுகள் கட்டுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும்.

Maash