செய்திகள்பிரதான செய்திகள்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட இஷாரா செவ்வந்தியின் சகோதரன்!

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணின் சகோதரன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தனது தாயின் இறுதிச் சடங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (15) கலந்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை கொலை செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (11) இஷாரா செவ்வந்தியின் தாயார் மாரடைப்பு காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையினுள் உயிரிழந்தார்.

இஷாரா செவ்வந்தியின் தாயாரின் சடலம் கந்தானை கட்டுவெல்லேகம பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட நிலையில் அவரது இறுதிச் சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது.

இதனால் அப்பகுதியைச் சுற்றி பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Related posts

முசலி கோட்டத்தின் அசமந்த போக்கு கவனம் செலுத்தாத மன்னார் வலையக் கல்விப்பணிப்பாளர்

wpengine

ஒரு மூடை உரத்திற்கு 2,500 ரூபா கட்டுப்பாட்டு விலை! ஜனாதிபதி அறிவிப்பு

wpengine

வேட்பாளர்களில் பலர் மோசடியில் ஈடுபட்டவர்கள்! மண் ,கொலை

wpengine