(அஷ்ரப் ஏ சமத்)
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தில் மேலதிக ஆணையாளராக கடமையாற்றுகின்ற ஜனாப் முஹம்மத் உட்பட மேலும் 7 முஸ்லிம் ஊழியா்களே அங்கு சேவையாற்றுகின்றனா்.
இவா்கள் 8 பேரும் இணைந்து முழு பரிட்சைத் திணைக்களத்தில் உள்ள பௌத்த ஹிந்து ஊழியா்களையும் ்இணைத்து நேற்றும் (23) ஆம் திகதி 7வது முறையாக இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு பரிட்சைத் திணைக்களத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிழக்வுக்கு தோ்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளா் முஹம்மத் கலந்து கொண்டாா்.