பிரதான செய்திகள்

பரீட்சைகளை ஒத்திவைக்க போவதில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க போவதில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட பிரகாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள 2,936 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2020 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பரீட்சைக்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,648 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது..!

Maash

புத்தளம் பகுதியில் காதலியை கொன்று விட்டு சரணடைந்த காதலன்..!

Maash

மீண்டும் இனவாதத்தை தூண்ட மஹிந்த முயற்சி

wpengine