செய்திகள்பிரதான செய்திகள்

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்.

இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர், துறைமுகத்துக்கு வந்த முதல் வாகனக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு எடுத்துவரப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பலில் நான்கு உயர் மற்றும் கனரக வாகன அலகுகள் இருந்துள்ளன.

அத்துடன் ஜப்பானின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர், பிராடோ, BMW, மெர்சிடிஸ் பென்ஸ், டொயோட்டா ரைஸ், ஹோண்டா வெசெல், டைஹாட்சு மற்றும் சுசுகி வேகன் ஆர் போன்ற பிரபலமான வாகனங்களும் இதில் உள்ளடங்கியுள்ளன.

இதேவேளை, மற்றுமொரு வாகனக் கப்பல், மே மாத ஆரம்பத்தில் துறைமுகத்துக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3500 வாகனங்கள் எடுத்து வரப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related posts

ஆளுனருக்கு எதிராக 217 வழக்கு தாக்கல்

wpengine

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் 46வது வருட ஆண்டு விழா (படங்கள்)

wpengine

பேஸ்புக்,வட்அப்,வைபர் சமூகவலை தளத்திற்கு எதிராக தண்டனை

wpengine