அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்!

2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்துள்ளதை அடுத்து, 04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் விஜயத்தில் இணைந்துள்ள அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றுக்கும் பின்வரும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவ்வாறு நியமிக்கப்பட்ட பதில் அமைச்சர்களின் விபரங்கள் பின்வருமாறு.

டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பதில் பாதுகாப்பு அமைச்சராக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக, தொழிலாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரது அமைச்சர் அருண் ஹேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கையில் தலைவிரித்தாடும் இனவாதம்.

wpengine

மதுஷ்வின் இலங்கை மற்றும் துபாயில் 23 வங்கிக் கணக்குகளில் 1000 கோடி

wpengine

கல்முனை விடயத்தில் தமிழ் மக்களை ஏமாற்றிய கருணா,வியாழந்திரன்

wpengine