பிரதான செய்திகள்

பதவி விலக தயார்! சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பேசும் ஜனாதிபதி

பதவி விலகத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் தாம் பதவி விலகத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கட்சித் தலைமைக் கூட்டத்தில் தெரிவித்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச   தெரிவித்துள்ளார் .

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  பாராளுமன்றத்தில்இன்று (20) கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி, அவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைக்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களிடம் ஆட்சியை ஒப்படைப்பதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இதற்கமைய பாராளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை காட்டுவதற்கு ஒவ்வொரு கட்சிகளும் முயற்சித்து வந்த நிலையில், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதேவேளை, நாளுக்கு நாள் இலங்கையின் நிலை மோசமாவதுடன், போராட்டங்களும் பல இடங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.

முக்கிய பிரமுகர்களின் வீடுகள் முற்றுகையிடப்படுவதுடன், போராட்டங்கள் வெடித்து உயிரிழப்பும் பதிவாகி உள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதியின் இந்த திடீர் அறிவிப்பால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Related posts

முதலைக்கு பலியான பாத்திமா மிஸ்பரா 14வயது சிறுமி

wpengine

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஈராண்டுகள் பூர்த்தி; தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி!

Editor

Duties and functions of new Ministers gazetted

wpengine