பிரதான செய்திகள்

பண்டாரவெளி காணி விடயத்தில் வெள்ளிமலை மக்களை மாவட்ட செயலகத்தில் கேவலமாக பேசிய கேதீஸ்வரன்! கிராம மக்கள் விசனம்

(சிபான்)

முசலி பிரதேசத்தில் பண்டாரவெளி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வெள்ளிமலை பாடசாலைக்கும்,மக்களும் சொந்தமான காணியினை கிராம மக்களுக்கும்,சமுக மட்ட அமைப்புகளுக்கும் தெரியாமல் முசலி பிரதேச செயலகத்தின் முன்னால் பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் அரிப்பு கத்தோலிக்க மக்களுக்கு முஸ்லிம்கள் வாழும் பகுதியில் தென்னை பயிர் செய்கைக்கு 5ஏக்கர் காணியினை வழங்கு முன்னேடுத்த திட்டத்தில் தற்போது பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இதனை கருத்தில் கொண்டும் நேற்று மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் செல்லத்துறை கேதீஸ்வரன் வெள்ளிமலை மக்களை மிகவும் கேவலமான முறையில் பேசி உள்ளதாக அறியமுடிகின்றது.

வெள்ளிமலை மக்கள் வாழும் காணிகள் அனைத்தும் அரிப்பு மக்களுக்கு சொந்தமான காணிகள் என்றும்,முஸ்லிம்களுக்கு நாங்கள் பிச்சை கொடுத்ததை போன்று நான் வழங்கினேன் எனவும் முஸ்லிம் குடியேற்றத்தை மிகவும் கேவலமான முறையில் பேசியதாகவும் தெரிவிக்கின்றனர்.

முசலி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது சட்ட விரோத மண் அகழ்வு,காணி கொள்ளை ,பெண்கள் உடனாக பாலியல் பிரச்சினை,நிதி மோசடி ,லஞ்சம் பெற்றுக்கொள்ளல்,போன்ற பல வகையான குற்றசாட்டுக்கள் சுமத்தப்படும் 8வருடகாலமாக முசலி பிரதேச செயலாளராக கடமையாற்றி உள்ளார். அத்துடன் இவர் கத்தோலிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காணி விடயத்தை அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் கரிசனை எடுத்து முஸ்லிம் மக்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

Related posts

திருடர்களை பாதுகாக்கும் மைத்திரி,ரணில் அரசு

wpengine

நவம்பர் மாதம் ஆறு மாகாண சபைகளுக்கு தேர்தல் எழுத்து மூலம் அறிவித்தல்

wpengine

அல்-குர்ஆனை வைத்து பூஜை செய்த சக்தி தொலைக்காட்சி! பல கண்டனம்

wpengine