உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

படுகொலை குற்றச்சாட்டு! பிரதி ஜனாதிபதி 15வருட சிறைத்தண்டனை

மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீனைப் படுகொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அந்நாட்டு முன்னாள் பிரதி ஜனாதிபதி அஹமெட் அதீப்புக்கு வியாழக்கிழமை 15 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சில நாட்களிலேயே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அப்துல்லா யமீன் விமான நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு படகில் திரும்பிய வேளை அந்தப் படகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் அவர் காயத்துக்குள்ளாகிய நிலையில் மயிரிழையில் உயிர்தப்பினார்.

அந்த சம்பவத்துக்கு சில வாரங்கள் கழித்து அஹமெட் அதீப் கைதுசெய்யப்பட்டார்.

ஜனாதிபதி பயணம் செய்த படகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் அஹ்மெட் அதீப் எதுவித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்ற போதும், படகில் குண்டு பொருத்தப்படுவதை தடுப்பதற்கு தேவையான போதிய முற்பாதுகாப்பு நடவடிக்கையை அவர் மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

எனினும் இந்த சம்பவம் குறித்து அமெரிக்கப் புலனாய்வு சபை கூறுகையில், ஜனாதிபதி பயணித்த படகில் குண்டு எதுவும் வெடிக்கவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா முஸ்லிம்களின் கடையினை இலக்கு வைக்கும் நகர சபை

wpengine

ரஷ்யாவுக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா

wpengine

ஒட்டமாவடியில் சுதந்திர தின மரநடுகை

wpengine