உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பக்ரீத் பண்டிகை! இன்று காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு சட்டம்

பக்ரீத் பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 10 மாவட்டங்களிலும் இன்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்டர்நெட் மற்றும் மொபைல் சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவி வந்த பதற்றமான சூழல், சமீபகாலமாக இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனால் அவ்வப்போது சில வன்முறைச் சம்பவங்கள் அங்கு நடக்கின்றன. இந்நிலையில், இன்று (13-09-16) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஸ்ரீ.நகரில் உள்ள ஐ.நா., சபை அலுவலகத்துக்கு நடைபயணம் மேற்கொள்ள பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

ஊரடங்கு உத்தரவு:

இதனையடுத்து, அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 10 மாவட்டங்களிலும் இன்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. மேலும் நேற்று(12-09-16) முதல் அடுத்த 72 மணிநேரத்துக்கு ஜம்மு-காஷ்மீரில் இன்டர்நெட் மற்றும் மொபைல் சேவைகளுக்கும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

Related posts

முஸ்லிம் மக்களுக்கெதிராக இனவாதம் பேசி வாக்குப்பெற முடியாது.

wpengine

உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் – உயர் நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு!

Editor

நம்பிக்கையில்லா பிரேரணை காலதாமதப்படுத்தாது உடனடியாக கொண்டுவர வேண்டும்

wpengine