பிரதான செய்திகள்

நோபல் பரிசு! ஏமாந்து போன மைத்திரி

2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு சற்று முன்னர் ஒஸ்லோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச அளவில் அணு ஆயுதங்களுக்கு எதிராக போராடி வந்த International Campaign to Abolish Nuclear Weapons(ICAN) என்ற அமைப்பிற்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியில் நிலவி வரும் அசாதாரண சூழலை தடுக்கவும், அணு ஆயுத பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கவும் போராடியதற்காக இந்த நோபல் விருது வழங்கப்பட உள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குரிய போட்டியாளர்களில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒருவராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் ஜனாதிபதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.

 

Related posts

32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Maash

பிரதமர் முன்னிலையில் வடபுல முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி பேசாத ஹக்கீம்! மீள்குடியேற்றத்திற்கு உதவுங்கள் றிஷாட் கோரிக்கை

wpengine

இந்துகள்,கத்தோலிக்கர்கள் பிரிந்து போட்டியிடுவது தற்கொலைக்கு சமம்

wpengine