பிரதான செய்திகள்

நுவரெலியாவில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 60வீத வெற்றி

இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி நுவரெலியா மாவட்டத்தில் 60 வீத வாக்குகளை பெற்று வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தில் ஐக்கிய தேசியக்கட்சியினருக்கு தெளிவுபடுத்தும் வகையில் இன்று பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே நவீன் திஸாநாயக்க இதனை கூறியுள்ளார்.

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக அதிகரித்துள்ள போதிலும் சமூகத்தில் பெண்களே பெண்களுக்கு வாக்களிப்பதில்லை.

ஐக்கிய தேசியக்கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இருந்த போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அப்படியான இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லை. அந்த கட்சியில் வேட்பாளர்களை தேடவும் சிரமம் ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் நவீன் திஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர் சுரநிமல ராஜபக்ஸ காலமானார்.

wpengine

முசலி பிரதேச வாழ்வாதாரத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி! ஊழல் லஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு (விடியோ)

wpengine

முகக்கவசத் தடை சட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில் புர்கா தடைசெய்யப்படும்!

Editor