பிரதான செய்திகள்

நுண்நிதிக் கடன் நிறுவனங்களை மூடிவிட வேண்டும்! வட்டி வீதம் குறைக்க நடவடிக்கை

கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளது.


அந்த நிறுவனங்களில் கடன் பெறும் நபர்கள் நீண்ட காலமாக முகம் கொடுத்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.


அதற்கமைய கடன் வழங்கும் நிறுவனங்களின் செயற்பாட்டு மாற்றம் தொடர்பில் அரசாங்கம் கண்கானித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


எப்படியிருப்பினும் இவ்வாறான நுண்நிதிக் கடன் நிறுவனங்களை மூடிவிட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


தற்போது குறித்த நிதி நிறுவனம் ஊடாக அறவிடப்படும் அதிக வட்டியை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு வெகு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அலிபாபா நிறுவனரும் சீனாவின் முன்னணி பணக்காரருமான ஜேக் மா எங்கு சென்றார்

wpengine

வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அதிபர் ஒருவருக்கு எதிரான முறைப்பாடு

wpengine

விக்னேஸ்வரனை முற்றுகையிட்ட தொண்டர் ஆசிரியர்கள்

wpengine